செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவெகவுக்கு ஆதரவு: விஜய் நாளை பதவியேற்கிறார்
சென்னை:
ஐ.யூ.எம்.எல் கட்சி தவெக-வுக்கு தனது ஆதரவை வழங்கியதைத் தொடர்ந்து 118 என்ற பெரும்பான்மை நிலையை உறுதி செய்திருக்கிறது விஜய்யின் தவெக. விஜய் ஆளுநரைச் சந்தித்து பெரும்பான்மையை உறுதிசெய்து, நாளை பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆளுநர் மாளிகையில் இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆதரவு கடிதங்களை ஆளுநர் அர்லேக்கரிடம் வழங்கி, பெரும்பான்மையை நிரூபிக்கவிருக்கிறார்.
ஆனால் பெரும்பான்மையை உறுதி செய்வதற்கு, அவரின் கட்சிக்கு இன்னும் 2 இடங்கள் தேவை. விசிக தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கும் எனக் கூறப்படும் நிலையில், அதில் தொடர்ந்து தாமதித்துக் கொண்டே இருக்கிறது விசிக. மற்றொருபுறம், ஐ.யூ.எம்.எல் கட்சியும் தவெக-வுக்கு ஆதரவு வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரண்டு இடங்களில் ஆதரவு தேவைப்படும் சூழலில், இரண்டு கட்சிகளில் யார் ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே சமயம், 118 என்ற பெரும்பான்மையைக் கடந்து இரண்டு கட்சிகளுமே தவெக-வுக்கு ஆதரவை வழங்க முன் வந்திருப்பதால் நாளை விஜய் பதவியேற்பார் என்ற பேச்சும் நிலவிக் கொண்டிருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
