செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் ரத்து: த.வெ.க விற்கு ஆதரவு தருவோமா இல்லையா? குழப்பமான சூழலில் ஆலோசனைகள் வேகமெடுத்துள்ளன
சென்னை:
அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்தாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சியாக 108 இடங்களை த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
இதனால் தவெக அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்தச் சூழலில் தான் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை சென்னைக்கு வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்புவிடுத்திருந்தார்.
அந்தவகையில் இன்று காலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் திடீரென ரத்தாகி இருப்பதாகத் தகவல் வெளியானது.
விஜய்க்கு ஆதரவு அளிப்பதில் கருத்து முரண்பாடு உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் இருவரும் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய்க்கு ஆதரவு தர வேண்டாம் என்று ஓ.எஸ் மணியன் தரப்பு சொல்வதாகவும், தவெகவிற்கு ஆதரவு தந்து அமைச்சரவையில் பங்கேற்கலாம் என்று சி.வி சண்முகம் தரப்பு சொல்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுன் கட்சியினருடன் தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அதிமுகவில் தற்போது கலவரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
