செய்திகள் தமிழ் தொடர்புகள்
தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை இன்று பிற்பகல் சந்திக்க திட்டம்
சென்னை:
தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை இன்று பிற்பகல் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 3.30 மணிக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார்.
பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெருங்கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி விஜய் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓரிரு வாரங்கள் அவகாசம் கோருவார் என்றும் கூறப்படுகிறது.இந்த தேர்தலில் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
