செய்திகள் மலேசியா
பில்லியன் கணக்கான ரிங்கிட்டைத் திருடி, துருக்கி குடிமகனாக ஆனேன் என்ற குற்றச்சாட்டு வெறும் அவதூறு: பர்ஹாஷ் போலிசில் புகார்
கோலாலம்பூர்:
வெளிநாடுகளில் பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள பணத்தைத் திருடியதுடன் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொழிலதிபர் டத்தோஶ்ரீ பர்ஹாஷ் வாஃபா சல்வடோர் மறுத்துள்ளார்.
துருக்கியே, ஆப்பிரிக்கா உட்பட வெளிநாடுகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பான மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளைப் பல ஊடகங்கள் ஒளிபரப்பி, மீண்டும் மீண்டும் கூறியதைத் தொடர்ந்து இந்த மறுப்பை தாம் தெரிவிப்பதாக அவர் வலியுறுத்தினார்.
நான் இப்போது துருக்கி குடிமகன் என்ற குற்றச்சாட்டும் உண்மைக்கு புறப்பானது.
நான் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உறுதியாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் மறுக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை, ஆதாரமற்றவை மட்டுமல்ல அவதூறானவை.
இவை எனது நற்பெயரையும் நேர்மையையும் களங்கப்படுத்துவதையும், எனது தனிப்பட்ட வாழ்க்கை, வணிக விவகாரங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த விவகாரத்தில் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் துருக்கி குடிமகன் அல்ல.
குற்றம் சாட்டப்பட்டதைப் போல எந்தவொரு திருட்டு அல்லது பணமோசடி நடவடிக்கைகளிலும் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.
மேலும் துருக்கியில் எனக்கு எந்த வங்கிக் கணக்குகளும் இல்லை.
நான் ஒரு தொழிலதிபர் மட்டுமே, தற்சமயம் அரசியலில் ஈடுபடவில்லை. இந்த நபர்களுக்கு அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் உள்ளன என்பதைத் தவிர, நான் ஏன் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை, என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
