செய்திகள் மலேசியா
யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை: 8 வயது மகளை இழந்தும் வேன் ஓட்டுநரை மன்னித்த தந்தை
பத்து பஹாட்:
"என் மகளை மோதிய அந்த வேன் ஓட்டுநரை நான் ஏற்கனவே மன்னித்துவிட்டேன்" என்று நூர் ஐனி உமைராவின் தந்தை, 39 வயதுடைய அஹ்மத் ஃபரீஸ் காலிட் கூறினார்.
மறைந்த நூர் ஐனி உமைரா, இரண்டாம் வகுப்பு மாணவி ஆவார். அவரைப் பள்ளியின் முதன்மை வாயில் முன், அவரது தாயார் அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்த போது, அவர் மீது வேன் மோதியதில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
தனது குழந்தைகளில் ஒருவரை இழந்திருந்தாலும், இறை நாட்டத்தைத் தான் ஏற்றுக்கொண்டதாக அஹ்மத் ஃபரீஸ் கூறினார்.
"என் மகளை மோதிய அந்த வேன் ஓட்டுநரை நான் ஏற்கனவே மன்னித்துவிட்டேன். ஒவ்வொரு உயிருக்கும் இறை நாட்டத்தில் ஒரு விதி இருக்கிறது என்பதால், நான் அமைதியாக இருக்கிறேன்" என்றார் அவர்.
இரண்டு உடன்பிறப்புகளில் மூத்தவர் என்று கூறப்படும் பாதிக்கப்பட்டவரின் உடலை, நேற்று சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையின் தடயவியல் துறையில் பெறச் சென்ற போது அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், அந்தச் சம்பவம் எதிர்பாராதது என்பதால், சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநரைக் குறை சொல்ல வேண்டாம் என்று அஹ்மத் ஃபரீஸ் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
"மறைந்தவர் அழகுபடுத்திக் கொள்வதை விரும்புவார். சில நேரங்களில், அவர் யூ டியூபைப் பார்த்து, அழகுபடுத்தும் முறைகளைப் பின்பற்றுவார். கடந்த வாரம் நாங்கள் அவரை மலாக்காவிற்குச் சுற்றுலா அழைத்துச் சென்றபோது, அவர் எனக்கு அழகுபடுத்திக் கொடுத்தது கடைசி முறையாகும்.
"அதுதான் கடைசி முறை. இதற்குப் பின்னர், எல்லாமே ஒரு நினைவாக மாறும்" என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
