செய்திகள் மலேசியா
‘சாக்குப்போக்குக்கு இடமில்லை’: சோஸ்மா சீர்திருத்தத்திற்கு 3 மாத காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்: குவான் எங் அன்வரிடம் வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) தொடர்பான சீர்திருத்தங்களை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளுமாறு, டி.ஏ.பி. மூத்த தலைவர் லிம் குவான் எங், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமை வலியுறுத்தியுள்ளார். மாரா சட்டத் திருத்தங்களில் காட்டிய அவசரத்தைப் போலவே இதிலும் அரசாங்கம் செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் சோஸ்மாவுக்கு எதிராகக் குரல் கொடுத்த அன்வர், பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அதனை சீர்திருத்துவதில் அதே தீவிரத்தைக் காட்டவில்லை என லிம் சுட்டிக்காட்டினார்.
“அடக்குமுறை, கடுமையான விதிகளை நீக்கி, அடிப்படை மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சி மீதான ஒற்றுமை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில், சோஸ்மாவை மூன்று மாதங்களுக்குள் திருத்தத் தவறுவதற்கு இனி எந்தச் சாக்குப்போக்கும் இல்லை,” என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பூமிபுத்ரா அமைப்பான மஜ்லிஸ் அமனா ராக்யாட் (மாரா) சட்டம் 1966-க்கு திருத்தங்களை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு அன்வர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, மூன்று வாரங்களுக்குள் திருத்த மசோதா அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படலாம் என தெரிவித்திருந்தார்.
மேலும், சோஸ்மாவின் பிரிவு 4(5) நீட்டிப்பை நிராகரிக்க 2022 மார்ச் மாதத்தில் எதிர்க்கட்சியை வழிநடத்திய அன்வரின் முன்னைய நிலைப்பாட்டையும் லிம் நினைவூட்டினார். அந்தப் பிரிவு, நீதிமன்ற அணுகல் இன்றி விசாரணைக்காக 28 நாட்கள் வரை தடுத்து வைக்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்த ஆண்டு ஜனவரியில் சோஸ்மாவின் கீழ் ஒன்பது நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட 16 வயது சிறுமியின் வழக்கையும் அவர் எடுத்துக்காட்டினார். அந்த அனுபவம் சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், காவலில் இருந்தபோது உடல்நலப் பிரச்சினைகளையும் சந்தித்ததாகவும் லிம் கூறினார்.
சோஸ்மாவின் பிரிவு 13 கீழ் வழங்கப்படும் பிணை விதிவிலக்கு, குறித்த சிறுமிக்குப் பயன்படுத்தப்படாததன் காரணம் என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்தப் பிரிவு பொதுவாக பிணையை மறுப்பதுடன், 18 வயதிற்குட்பட்டவர்கள், பெண்கlளுக்கும் உடல்நலக்குறைவுடையோருக்கும் விதிவிலக்குகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
