செய்திகள் உலகம்
ஆஸ்திரியாவில் பரபரப்பு: பிஞ்சு குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த நபர் அதிரடியாக கைது
வியன்னா:
ஆஸ்திரியாவில் உள்ள பிரபல 'ஹிப்' (HiPP) நிறுவனத்தின் குழந்தை உணவுப் பொருள்களில் விஷம் கலந்து மிரட்டல் விடுத்த வழக்கில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை அந் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
39 வயதான அந்த நபரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஐசன்பிராக் (Eisenstadt) நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் குழந்தை உணவுப் பொருள்களில் எலி விஷத்தைக் கலந்துவிட்டு, நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆதாரங்களை மறைக்கக்கூடும் அல்லது தப்பியோடக்கூடும் என்ற அடிப்படையில் அவருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நச்சு கலந்த உணவுப் பொருள்கள் ஆஸ்திரியா மட்டுமின்றி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.
இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்த முயன்றது, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அந்த நபர் மறுத்து வருகிறார். இது குறித்த மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 11:41 am
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்
June 22, 2026, 11:41 am
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்
June 22, 2026, 11:37 am
