செய்திகள் மலேசியா
மே 31, ஜூன் 1 பொது விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு
கோலாலம்பூர்:
விசாக தினம் (மே 31), மாமன்னர் அவர்களின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் (ஜூன் 1) ஆகியவற்றை முன்னிட்டு, பொது விடுமுறையை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
தீபகற்ப மலேசியா, லாபுவான் கூட்டாட்சிப் பிரதேசத்தில் உள்ள தனியார் துறை முதலாளிகள், தங்கள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஐந்து கட்டாய பொது விடுமுறை நாட்களில், மாமன்னரின் பிறந்தநாளும் ஒன்றாகும் என்று மனிதவள அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1955 ஆம் ஆண்டின் வேலைச் சட்டத்தின் கீழ், அந்த விடுமுறையை வேறு நாளில் மாற்ற முடியாது என்று அது கூறியுள்ளது.
இதற்கிடையில், வெசாக் தினம் என்பது, முதலாளிகள் தேர்வு செய்யக்கூடிய ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாகும். இது, ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆறு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாட்களை நிறைவு செய்வதாகக் கருதப்படுகிறது.
"பொது விடுமுறை நாள் வார இறுதி ஓய்வு நாள் அல்லது வேறு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்ட விடுமுறை நாளில் வந்தால், அடுத்த வேலை நாள், ஊதியத்துடன் கூடிய மாற்றுப் பொது விடுமுறையாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமையை வாராந்திர ஓய்வு நாளாக நிர்ணயித்து, வெசாக் தினத்தை பொது விடுமுறையாகத் தேர்ந்தெடுக்கும் முதலாளிகள், ஜூன் 1, திங்கட்கிழமை மாமன்னரின் பிறந்தநாளை விடுமுறையாக வழங்க வேண்டும், அதை மாற்ற முடியாது. மேலும், ஜூன் 2, 2026, செவ்வாய்க்கிழமை வெசாக் தினத்திற்கான மாற்று விடுமுறையாக வழங்க வேண்டும்.
இருப்பினும், சட்ட விதிகளுக்கு இணங்க, அந்த மாற்று விடுமுறையை, ஊழியர்களின் ஒப்புதலுடன் வேறு நாளில் மாற்றலாம்.
இதற்கிடையில், 4,000 ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவான சம்பளத்தைப் பெறும் அல்லது 1955 ஆம் ஆண்டின் வேலைச் சட்டத்தின் முதல் அட்டவணையின் கீழ் வரும் ஊழியர்கள், பொது விடுமுறை நாளில் வேலை செய்ய உத்தரவிடப்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் கூடுதல் ஊதியத்தைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
முதலாளிகள் சட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும் என்றும், ஊழியர்களின் நலன்கள் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பாரு 4 தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
