செய்திகள் மலேசியா
தவாவ் கொள்ளைச் சம்பவம்: கொள்ளை வழக்கில் அரசு ஊழியர் கைது
தவாவ்:
தவாவ் பகுதியில் நிகழ்ந்த வீடு புகுந்து திருடிய வழக்கில், 42 வயது மதிக்கத்தக்க அரசு ஊழியர் ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர். லஹாட் டத்து, ஃபெல்டா சஹாபாத் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது அவர் பிடிபட்டார்.
கடந்த மார்ச் 25-ஆம் தேதி, தஞ்சோங் பத்து தெங்கா பகுதியில் உள்ள ஒரு வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 61 வயது மூதாட்டி, தனது வீட்டின் பின்புற ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பதை முதலில் கவனித்துள்ளார். அந்த வீட்டிலிருந்து இரண்டு மடிக்கணினிகள், 60 அங்குலத் தொலைக்காட்சிப் பெட்டி, கைக்கடிகாரங்கள், காலணிகள், கைப்பை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன.
இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலிசார், சந்தேக நபரைக் கைது செய்து சில பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தவாவ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஜாஸ்மின் ஹுசைன், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார்.
எவ்வித சமரசமுமின்றி இத்தகைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்புத் தன்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் நடமாட்டம் இருந்தால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பாரு 4 தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
