நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10A மாணவர்கள் தொடர்பான வாக்குறுதியை அரசாங்கம் மீறவில்லை: துணை அமைச்சர் மறுப்பு

பெட்டாலிங் ஜெயா: 

10A மதிப்பெண்கள் பெற்ற எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடங்களை வழங்குவதாகிய வாக்குறுதியை புத்ராஜெயா நிறைவேற்றத் தவறிவிட்டதாக எம்.சி.ஏ. தலைவர் வீ கா சியோங் கூறியதை, கல்வி துணை அமைச்சர் வோங் கா வூ இன்று மறுத்துள்ளார். மேலும், அந்தக் குற்றச்சாட்டை ஆதாரமற்றது, அவதூறு என்று அவர் விவரித்தார்.

தனது அமைச்சின் சோதனைகளில், வீ குறிப்பிட்ட 11 வழக்குகளிலும் உள்ள மாணவர்கள் ஏற்கனவே முன்னதாக சலுகைகளைப் பெற்றிருப்பதாகக் கண்டறியப்பட்டதாக வோங் கூறினார்.

"ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் அறிவிப்பின் போது, அந்த மாணவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே ஒரு இடம் வழங்கப்பட்டிருந்தது. மற்ற 10 மாணவர்கள், ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11.01 மணியளவில், தங்களது மெட்ரிகுலேஷன் சலுகைகளின் அறிவிப்பைப் பெற்றனர்" என்று அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.

தங்களது எஸ்.பி.எம் முடிவுகளின் மறு சரிபார்ப்புக்குப் பின்னரே சில மாணவர்கள் 10A மதிப்பெண்களைப் பெற்றதாலும், ஆரம்ப அறிவிப்பின் போது தரவு இறுதி செய்யப்படாததாலுமே இந்தப் பிரச்சினை எழுந்ததாக அவர் கூறினார்.

ஏப்ரல் 29 ஆம் தேதி, இதுபோன்ற மொத்தம் 286 மாணவர்களும், தங்களது மெட்ரிகுலேஷன் சலுகைகளை எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்பட்டனர்.

மே 2 ஆம் தேதி, தானியங்கி மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டின் வாக்குறுதி இருந்த போதிலும், கவனிக்கப்படாமல் போன எஸ்.பி.எம்-இல் சிறந்த மதிப்பெண் பெற்ற 11 மாணவர்களை  உடனடியாக சேர்க்குமாறு வீ அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தானியங்கி முறையின் கீழ், இதுபோன்ற விலக்குகள் எவ்வாறு நிகழும் என்று கேட்டு, அந்த மாணவர்களிடமிருந்து எம்.சி.ஏ. இளைஞர் பிரிவு புகார்களைப் பெற்றதாக, ஆயர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினரான வீ கூறினார். மேலும், இந்தப் பிரச்சினையை சரிசெய்யுமாறு அரசாங்கத்தையும் அவர் கோரியுள்ளார்.

10A மாணவர்களை மெட்ரிகுலேஷன் திட்டத்தில் தானாகச் சேர்ப்பதற்கான கொள்கை, உறுதியளித்தபடியே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய வோங், தான் அரசாங்கம் அதன் வாக்குறுதியை மீறவில்லை என்று வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset