செய்திகள் மலேசியா
இந்தியாவின் புதுடில்லி போலிசார் போல் நடித்து மக்களை ஏமாற்றிய மக்காவ் மோசடிக் கும்பல் முறியடிப்பு: 22 பேர் கைது
கோலாலம்பூர்:
இந்தியாவின் புதுடில்லி போலிசார் போல் நடித்து மக்களை ஏமாற்றிய மக்காவ் மோசடிக் கும்பலை போலிசார் முறியடித்துள்ளனர்.
புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமது இசா இதனை கூறினார்.
செராஸில் உள்ள ஒரு ஆடம்பர இல்லத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனையில், இந்தியாவில் புதுடில்லி போலிசார் போல் நடித்து அங்குள்ள மக்களை ஏமாற்றிய மக்காவ் மோசடிக் கும்பலை அதிகாரிகள் முறியடித்தனர்.
ஏப்ரல் 23 அன்று கிடைத்த பொதுத் தகவல், உளவுத் தகவலின் அடிப்படையில் வெளிநாட்டினர், உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட இந்த சோதனையில் போலிசார் 22 பேரைக் கைது செய்தது.
இந்தக் கும்பல் புதுடில்லி போலிசாரின் சீருடைகளை அணிந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டுள்ளது.
மேலும் அவர்கள் சமூக ஊடகங்களில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக தேசத்துரோக உள்ளடக்கத்தைப் பரப்புவதில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதாகக் கூறி இந்தியாவில் உள்ளவர்களைக் குறிவைத்து ஏமாற்றி வந்துள்ளது.
இந்த சோதனையில் இந்திய போலிசாரின் சீருடைகள், 49 கைபேசிகள், இரண்டு மடிக்கணினிகள், ஒரு ஐபேட், ஒரு வைஃபை ரௌட்டர், வீட்டுச் சாவிகள் கண்டெடுக்கப்பட்டன.
இவை அனைத்தின் மதிப்பும் 25,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று ருஸ்டி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 1:14 pm
தர்ம மடானி திட்டம்; ஆலயங்களை சமூக மையங்களாக மாற்றுகிறது: குணராஜ்
May 5, 2026, 1:13 pm
1.1 பில்லியன் ரிங்கிட் அரசுத் திட்ட விசாரணை; மறைப்பதற்கு ஒன்றுமில்லை: ரபிசி
May 5, 2026, 11:28 am
கண்காணிப்புக் கேமராவில் சிக்கிய கொடூரம்: சிறுவர்களை நாய் கூண்டில் அடைத்த பணிப்பெண் கைது
May 5, 2026, 11:25 am
தொழிலாளர் தினக் கொண்டாட்டம் 2026 அதன் இலக்குகளை அடைந்துள்ளது
May 5, 2026, 11:24 am
