செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு எதிரான நெருக்கடி குறித்து விவாதிக்க நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் செயற்குழு இன்று கூடுகிறது
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு எதிரான நெருக்கடி குறித்து விவாதிக்க நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் செயற்குழு இன்று கூடுகிறது.
அரசியல் தொடர்பான பல விஷயங்கள் குறித்து விவாதித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று இரவு 8 மணிக்கு இந்தக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
தொடர்பு கொண்ட இரு கட்சிகளின் வட்டாரங்கள், புத்ராஜயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதை உறுதிப்படுத்தின.
இரு தரப்பின் உயர்மட்டத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்தும், குறிப்பாக நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூனுக்கு அளித்து வந்த ஆதரவை அம்னோ மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பப் பெற்ற நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படும்.
மேலும் நெகிரி செம்பிலான் பிரச்சினை, மாநிலத் தேர்தல் விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் விவாதிக்கப்பட்டன என்று தகவல்கள் கூறுகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 1:14 pm
தர்ம மடானி திட்டம்; ஆலயங்களை சமூக மையங்களாக மாற்றுகிறது: குணராஜ்
May 5, 2026, 1:13 pm
1.1 பில்லியன் ரிங்கிட் அரசுத் திட்ட விசாரணை; மறைப்பதற்கு ஒன்றுமில்லை: ரபிசி
May 5, 2026, 11:28 am
கண்காணிப்புக் கேமராவில் சிக்கிய கொடூரம்: சிறுவர்களை நாய் கூண்டில் அடைத்த பணிப்பெண் கைது
May 5, 2026, 11:25 am
தொழிலாளர் தினக் கொண்டாட்டம் 2026 அதன் இலக்குகளை அடைந்துள்ளது
May 5, 2026, 11:24 am
