செய்திகள் மலேசியா
தர்ம மடானி திட்டம்; ஆலயங்களை சமூக மையங்களாக மாற்றுகிறது: குணராஜ்
செந்தோசா:
மித்ராவின் தர்ம மடானி திட்டம் ஆலயங்களை சமூக மையங்களாக மாற்றுகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.
தர்ம மடானி திட்டத்தின் முன்னெடுப்பின் அசல் நோக்கம் குறித்து எழுப்பப்பட்ட பல கவலைகளையும் கருத்துக்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் கல்வி, கலாச்சார நடவடிக்கைகளைக் கோரும் தெளிவான வழிகாட்டுதல்களுடன் ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் தற்போதைய அணுகுமுறை ஒரு ஆக்கப்பூர்வமான முன்னேற்றப் படியாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த முன்னெடுப்பு நமது ஆலயங்கலை உண்மையான சமூக மையங்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
கல்வி, திறன் மேம்பாடு, கலாச்சார செழுமை போன்ற திட்டங்களுடன் நிதியை இணைப்பதன் மூலம் ஆலயங்கள் தங்கள் பங்கை மதச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு விரிவுபடுத்தி, பரந்த சமூகத்திற்கு சேவை செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
முக்கியமாக, இந்த நிர்ணயிக்கப்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளாத கோயில்கள் முறையான பொறுப்புக்கூறல் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இது வழங்கப்படும் உதவி வெறும் அடையாளமாக இல்லாமல், அர்த்தமுள்ள சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்கிறது.
தேவையுள்ளவர்களைச் சென்றடைதல், பாதிக்கப்படக்கூடிய தனிநபர்களையும் குடும்பங்களையும் கண்டறிதல், அவர்களை ஏற்கனவே உள்ள மடானி திட்டங்கள், ஆதரவு அமைப்புகளுடன் இணைத்தல் போன்ற பரந்த பங்களிப்பை கோயில்கள் ஆற்றுவதையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.
நமது ஆலயங்கள், நமது சமூகம், நமது பொறுப்பு.
இந்தக் கட்டத்தில் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு ஒரு தொடக்கப் புள்ளியாகும். கல்வி, கலாச்சாரம், சமூக முன்னெடுப்புகள் மூலம் கோயில்கள் சமூகத்துடன் ஈடுபடுவதற்கு உதவும் ஒரு சிறிய ஆனால் அர்த்தமுள்ள முதலீடு இது.
இந்த முயற்சிகள் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தினால், மடானி அரசிடமிருந்து அதிக ஆதரவையும் விரிவாக்கப்பட்ட நிதியையும் கோருவதற்கான நமது வாதம் வலுப்பெறும்.
அதன் அடிப்படையில் மடானி கட்டமைப்பின் கீழ் அனைவரையும் உள்ளடக்கிய, சமூகத்தால் இயக்கப்படும் வளர்ச்சிக்குத் தனது அர்ப்பணிப்பைக் காட்டிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மித்ரா திட்டங்கள் அவற்றின் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டு, சமூகத்திற்குத் திறம்படப் பயனளிப்பதை உறுதி செய்த டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கும் எனது பாராட்டுகள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2026, 1:13 pm
1.1 பில்லியன் ரிங்கிட் அரசுத் திட்ட விசாரணை; மறைப்பதற்கு ஒன்றுமில்லை: ரபிசி
May 5, 2026, 11:28 am
கண்காணிப்புக் கேமராவில் சிக்கிய கொடூரம்: சிறுவர்களை நாய் கூண்டில் அடைத்த பணிப்பெண் கைது
May 5, 2026, 11:25 am
தொழிலாளர் தினக் கொண்டாட்டம் 2026 அதன் இலக்குகளை அடைந்துள்ளது
May 5, 2026, 11:24 am
