செய்திகள் உலகம்
சீனாவில் பெரும் சோகம்: பட்டாசு ஆலை வெடிப்பில் 21 பேர் உயிரிழப்பு
சாங்ஷா:
மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 61 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லியுயாங் நகரில் உள்ள ஹுவாஷெங் பட்டாசு நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில், நேற்று மாலை சுமார் 4.43 மணியளவில் இந்தத் விபத்து நேரிட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 480-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், ஐந்து குழுக்களாகப் பிரிந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் மூன்று மீட்புப் பணிக்கான இயந்திர ரோபோக்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி, முதற்கட்ட தேடுதல் பணிகள் முடிவடைந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தற்போது இரண்டாம் கட்ட தேடுதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பட்டாசு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர விபத்திற்கான முதன்மைக் காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதே இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணமோ என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 11:41 am
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்
June 22, 2026, 11:41 am
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்
June 22, 2026, 11:37 am
