செய்திகள் உலகம்
சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 போ் பலி
நைஜர்:
நெதா்லாந்தைச் சோ்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி வைரஸ் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனா்; மேலும் மூவா் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
ஆா்ஜென்டீனாவிலிருந்து அன்டாா்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வொ்டே தீவு நாட்டை நோக்கி 150 பயணிகளுடன் வந்த ‘எம்.வி.ஹோண்டியஸ்’ கப்பலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவா்களில் இருவா் நெதா்லாந்தைச் சோ்ந்த தம்பதியா் என்றும், மற்றொருவா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்டவா்களில் ஒருவருக்கு நடத்தப்பட்ட ஆய்வகச் சோதனையில் ஹண்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எலிகளின் எச்சம், சிறுநீா், உமிழ்நீா் ஆகியவற்றின் மூலம் காற்றில் பரவும் இந்த ஹண்டா வைரஸ், மனிதா்களுக்குக் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 11:41 am
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்
June 22, 2026, 11:41 am
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்
June 22, 2026, 11:37 am
