செய்திகள் கலைகள்
பன்முகக் கலைஞர் ஜலீல் ஹமிட் காலமானார்
சுபாங் ஜெயா:
மலேசியத் திரைப்பட, தொலைக்காட்சி உலகின் பன்முகத் திறமை மிக்க மூத்த நடிகர் ஜலீல் ஹமிட் (69), இன்று மதியம் தனது இல்லத்தில் உறக்கத்திலேயே காலமானார்.
மறைந்தவரின் ஐந்தாவது மகள் அஃபிகா ஜலீல் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் தந்தையின் மறைவு குடும்பத்தினரால் அறியப்பட்டது என்று தெரிவித்தார்.
காலை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக இதய வீக்கம் தொடர்பான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதனால் ஏற்படும் சிக்கல்களே மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்குகள் மசூதி அல் முனவ்வாராவில் நடைபெற்று, பின்னர் USJ 21 இஸ்லாமிய கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்படும்.
ஜலீல் ஹமிட், மலேசிய கலைத்துறையில் பல தசாப்தங்களாக தடம் பதித்தவர். நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் என பல்வேறு தளங்களில் தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் இதயத்தை வென்றவர்.
அவர் குறிப்பாக உணர்ச்சி பூர்வமான கதாபாத்திரங்களிலும், குடும்ப, சமூகவியல் பின்னணியிலான கதைகளிலும் ஆழமான வெளிப்பாட்டை அளித்து “வாழும் கதாபாத்திரம்” என்ற பெயரைப் பெற்றார்.
2024ஆம் ஆண்டு, “ஜலீல் ஹமிட் - செனிமான் அனாக் ஃபெல்டா” என்ற சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டு, தனது கலைப் பயணம், வாழ்க்கைப் போராட்டங்கள், அனுபவங்களை பதிவுசெய்தார். இது இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் நூலாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், அல் ஹிஜ்ரா தொலைக்காட்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மதநெறி சார்ந்த தொலைக்காட்சி திரைப்படத்தில் அண்மையில் மீண்டும் நடித்தது, அவரது கலைவாழ்க்கையின் உற்சாகமான திருப்பு முனையாக அமைந்தது.
தன்னலமற்ற அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு, கலைக்கான ஆழ்ந்த காதலால் உருவான அவரது வாழ்க்கை, மலேசிய கலைத்துறைக்கு ஒரு நிலையான மரபை விட்டுச் செல்கிறது.
அவரது மறைவு, ரசிகர்களுக்கும் கலைத்துறைக்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
