செய்திகள் வணிகம்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு: மலேசியர்களுக்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை
கோலாலம்பூர்:
உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியின் தாக்கம், அடுத்த ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்குள் மலேசிய மக்களின் வாழ்க்கைச் செலவில் எதிரொலிக்கும் என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் எச்சரித்துள்ளார்.
தளவாடங்கள், உரங்கள், பிற தொழில்முறை மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், உணவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதற்கட்டமாகத் தளவாடங்கள் (logistics), வேளாண்மைத் துறைகள் இந்த நெருக்கடியால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பெட்ரோல் மானியங்கள் வழங்கப்படுவதால் போக்குவரத்துச் செலவுகள் கட்டுக்குள் இருப்பதாகவும், எரிசக்திப் பயன்பாட்டில் பொதுமக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மற்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்திய போதிலும், மலேசியா தனது 'பூடி95' திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் ரோன்95 பெட்ரோலை RM1.99 ரிங்கிட் என்ற மானிய விலையிலேயே தொடர்ந்து வழங்கி வருகிறது.
மேற்காசியாவில் நிலவும் அமெரிக்கா-ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்படக்கூடிய சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) அரசு கைகொடுக்க முன்வந்துள்ளது.
இதற்காகச் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன நிதியளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் (SJPP) கீழ் கூடுதலாக RM5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், மத்திய வங்கியும் இந்த நிறுவனங்களின் சுமையைக் குறைக்க, RM5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தமாக, நெருக்கடியால் பாதிக்கப்படும் தொழில் துறைகளை நிலைப்படுத்த அரசு மற்றும் மத்திய வங்கி இணைந்து RM10 பில்லியன் ரிங்கிட் நிதியுதவியை வழங்கத் திட்டமிட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
