செய்திகள் மலேசியா
இளம் பெண் 61 முறை கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; பொறாமையே கொலைக்குக் காரணம் என நம்பப்படுகிறது: போலிஸ்
கோத்தாபாரு:
கெத்தாரேவில் 61 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவரின் கொலைக்கு பொறாமையே காரணம் என நம்பப்படுகிறது.
ஒரு கருத்து வேறுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணை 19 வயது ஆண் நண்பரே கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கலாம் போலிஸ் சந்தேகிக்கிறது.
கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட் இதனை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் கொலைக்கு பொறாமையே காரணம் என போலிஸ் நம்புகிறது.
பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என்று ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரின் காரில் இருந்தபோது அவர் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதால், இந்தக் கொலை வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டது என போலிஸ் நம்புகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 10:18 pm
மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான அம்னோவின் பாதை இன்னும் நீண்டது: கைரி
May 2, 2026, 4:06 pm
அம்னோவின் மதிப்புமிக்கத் தலைவர் நஜிப்: ஒன் ஹாஃபிஸ் காஜி
May 2, 2026, 3:33 pm
சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்குப் பெர்கேசோ பாதுகாப்பு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
May 2, 2026, 3:11 pm
