செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ-வில் பிச்சை எடுத்த வெளிநாட்டவர்கள்: இருவர் கைது
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய முனையத்தில் (கேஎல்ஐஏ) பிச்சை எடுப்பதாக நம்பப்படும் நிலையில், இரண்டு வெளிநாட்டு ஆண்களை நேற்று போலிஸார் கைது செய்தனர்.
28, 45 வயதுடைய இரண்டு ஆண்கள், சமூக ஊடகங்களில் வைரலான நபர்கள் என்று சந்தேகிக்கப்பட்டதாகத் கேஎல்ஐஏ மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் எம். ரவி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணையில், தஜிகிஸ்தான், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களிடம், பாஸ்போர்ட் அல்லது சரியான பயண ஆவணங்கள் இல்லை என்று கண்டறியப்பட்டது.
கேஎல்ஐஏ-வில் பொதுமக்களிடமிருந்து பணத்தைக் கோருவதில், அவர்கள் அனுதாபத்தைப் பெற்றதாகத் தெரிகிறது.
1959/63 ஆம் ஆண்டின் குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 4:06 pm
அம்னோவின் மதிப்புமிக்கத் தலைவர் நஜிப்: ஒன் ஹாஃபிஸ் காஜி
May 2, 2026, 3:33 pm
சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்குப் பெர்கேசோ பாதுகாப்பு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
May 2, 2026, 11:42 am
