நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிவரவுத் துறையின் அதிரடி நடவடிக்கை: ஆவணங்களின்றித் தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் கைது

கூச்சிங்:

சரவாக் மாநிலத்தில் குடிநுழைவுத் துறை நேற்று நகரம் முழுவதும் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு எதிரான ஒழிப்பு நடவடிக்கையில் 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

 கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் இந்தோனேசியா நாட்டினரும், ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவருமாக உள்ளனர் என்று குடிநுழைவு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பகிர்ந்து பயன்படுத்தப்படும் வீடுகள், வாடகை தங்குமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, கைது செய்யப்பட்டவர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதாக உறுதி செய்யப்பட்டது,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 28 அமலாக்க அதிகாரிகள் பங்கேற்ற இந்த நடவடிக்கையின் போது, வெளிநாட்டினரின் தங்குமிடங்களாக சந்தேகிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான கண்காணிப்பும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டன.

“குடிநுழைவு சட்ட விதிமுறைகளை மீறும் வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்,” என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset