செய்திகள் மலேசியா
திரையிசை கண்ட இலக்கியம் நயம்பட உரைப்போம் போட்டி; பாடல்களில் மறைந்துள்ள இலக்கியத்தை வெளிக்கொணரும் புதிய முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
கிள்ளான்:
திரையிசை கண்ட இலக்கியம் நயம்பட உரைப்போம் போட்டி;ல் என்பது பாடல்களில் மறைந்துள்ள இலக்கியத்தை வெளிக்கொணரும் புதிய முயற்சியாகும்.
ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் இதனை கூறினார்.
ஓம்ஸ் குழுமம் பல்வேறு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் பங்கேற்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் திரையிசை கண்ட இலக்கியம், நயம்பட உரைப்போம் 2026 எனும் போட்டியை நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.
ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன் மலர் ஊடகம் இப்போட்டியை நடத்துகிறது.
திரைப்பட பாடல்களில் மறைந்துள்ள இலக்கியத்தை வெளிக்கொணரும் முயற்சியான இப்போட்டியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓம்ஸ் தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக இப்போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.
முதல் பிரிவில் 18 முதல் 25 வயதினரும், இரண்டாவது பிரிவில் 26 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம்.
இரு பிரிவுகளிலும் வெற்றி முதல் போட்டியாளருக்கும் தலா 5,000 ரிங்கிட், தங்கப்பதக்கம், கிண்ணம், சான்றிதழ் பரிசாக வழங்கப்படும்.
இதே போன்று அடுத்தடுத்த இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
குறிப்பாக பங்கேற்கும் அனைவருக்கும் இறுதிச் சுற்றுடன் நடத்தப்படும் பரிசளிப்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழ்த்திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செய்யுள்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கும்படியாக இப்போட்டி அமைந்துள்ளது.
அனைத்து வயதினரும் பங்கேற்கும்படி இரு பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
மே 25க்குள் பதிவு செய்து அதன்பின்னர் காணொலி அனுப்புவதற்கான அவகாசமும் வழங்கப்படும்.
காணொலியின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுச் செய்யப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்போட்டியின் இறுதி சுற்று வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி சிலாங்கூரில் ஓம்ஸ் பா. தியாகராஜன் தலைமையில் நடைபெறும்.
ஆக இப்போட்டியில் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு போட்டி செயலாளர் தினகரன் கூறினார்.
இப்போட்டிக்கான மேலதிக விவரங்களை 0122443010 எனும் எண்களில் பெறலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 4:06 pm
அம்னோவின் மதிப்புமிக்கத் தலைவர் நஜிப்: ஒன் ஹாஃபிஸ் காஜி
May 2, 2026, 3:33 pm
சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்குப் பெர்கேசோ பாதுகாப்பு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
May 2, 2026, 3:11 pm
