செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி; அன்வாரை முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த கட்டாயப்படுத்துவதே அம்னோவின் யுக்தியாகும்: ரபிசி
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி டத்தோஸ்ரீ அன்வைரை முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த கட்டாயப்படுத்துவதே அம்னோவின் யுக்தியாகும்.
முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடி ஒரு சாதாரண அமைதியின்மை மட்டுமல்ல.
மாறாக இந்த அக்டோபரிலேயே ஒரு பொதுத் தேர்தலை நடத்தக் கட்டாயப்படுத்துவதற்கான அம்னோவின் ஆரம்பகட்ட யுக்தியாக இது இருக்கலாம்.
நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜொகூர், மலாக்கா பொதுத் தேர்தல்களில் ஏற்பட்டது போன்ற ஒரு வெற்றி அலையை உருவாக்குவதற்கான அம்னோவின் மாபெரும் யுக்தியே இந்த நெகிரி செம்பிலான் நெருக்கடி என்று நான் நம்புகிறேன்.
நாடாளுமன்றத்தைக் கலைத்து ஒரு பொதுத் தேர்தலை நடத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைக் கட்டாயப்படுத்துவதே இதன் நோக்கம்.
இப்போதும் அதே உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு பெரிய அலையை உருவாக்க விரும்புகிறார்கள்.
அது டத்தோஸ்ரீ அன்வார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரை முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த நிர்பந்திக்கும்.
மேலும் அம்னோ மலேசியாவில் முழுமையான வெற்றியைப் பெற விரும்புகிறது என்று ரபிசி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 10:18 pm
மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான அம்னோவின் பாதை இன்னும் நீண்டது: கைரி
May 2, 2026, 4:06 pm
அம்னோவின் மதிப்புமிக்கத் தலைவர் நஜிப்: ஒன் ஹாஃபிஸ் காஜி
May 2, 2026, 3:33 pm
சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்குப் பெர்கேசோ பாதுகாப்பு: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
May 2, 2026, 3:11 pm
