நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான அம்னோவின் பாதை இன்னும் நீண்டது: கைரி

கோலாலம்பூர்:

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான அம்னோவின் பாதை இன்னும் நீண்டது.

அம்னோ முன்னாள் இளைஞர் அணி தலைவர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

கட்சி மீதான மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மீண்டும் பெறுவதற்கு அம்னோ நீண்ட, சவாலான பாதையை எதிர்கொள்கிறது.
கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள், கடந்தகால தவறுகளை ஒப்புக்கொள்வதை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது.

மாறாக மக்களுக்குப் புதிய யோசனைகளையும் திட்டங்களையும் முன்வைக்க வேண்டும்.

நான் தற்போது ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமே, ஆனால் அம்னோ மேலும் வலுப்பெறுவதை நான் காண விரும்புகிறேன்.

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

தவறுகளை ஒப்புக்கொள்வது முதல் படி மட்டுமே, அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நுழைவுச்சீட்டு அல்ல.

அம்னோவின் 80ஆவது ஆண்டு விழா மாநாட்டின் நிறைவு விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset