நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரே நாளில், KLIA2-ல் இரண்டாவது வெளிநாட்டவர் கீழே விழுந்து உயிரிழந்தார்: பலியான இரண்டாவது வெளிநாட்டவர் 30 வயது அல்ஜீரியர்

புத்ராஜயா:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2-ல் (KLIA T2) நேற்று இரவு கீழே விழுந்ததில் மற்றொரு வெளிநாட்டவர் உயிரிழந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.

KLIA மாவட்ட காவல்துறைத் துணை ஆணையர் ஏ எஸ் பி எம். ரவி கூறுகையில், இரவு சுமார் 9.10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 30 வயது அல்ஜீரிய நபர் ஒருவர் முனையத்தின் பால்கனிக்கு வெளியே இருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது என்றார்.

பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக சைபர்ஜயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளித்ததாக அவர் கூறினார்.

“இருப்பினும், இன்று அதிகாலை சுமார் 2.55 மணியளவில், அந்த நபர் இறந்துவிட்டதை மருத்துவமனை உறுதி செய்தது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரண அறிக்கை (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்தச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தகவல் தெரிந்த எவரும் விசாரணைக்கு உதவுவதற்காக, KLIA மாவட்ட காவல் தலைமையகத்தை 03-8776 8222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேற்று மதியம், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2-இன் தளம் 3-இலிருந்து சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் தவறி விழுந்து உயிரிழந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset