செய்திகள் வணிகம்
தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் மலேசியா: ஏர்டிரங்க் நிறுவனத்தின் RM27 பில்லியன் ரிங்கிட் திட்டம்
கோலாலம்பூர்:
ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் முன்னணித் தரவு மைய (Data Centre) நிறுவனமான 'ஏர்டிரங்க்' (AirTrunk), மலேசியாவில் கூடுதலாக 12 பில்லியன் வெள்ளியை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இதன் மூலம், மலேசியாவில் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பு RM27 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஏர்டிரங்க் நிறுவனத்தின் நிறுவனர், தலைமைச் செயல் அதிகாரி ராபின் குடா தலைமையிலான குழுவினர், நேற்று பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சந்திப்பின் போது, ஜொகூர் மாநிலத்தில் அமையவுள்ள தரவு மையங்களின் கட்டுமானப் பணிகள் குறித்தும், உள்ளூர் நிறுவனங்கள் இத்துறையின் மதிப்புச் சங்கிலியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த முதலீட்டு முடிவானது, மலேசியாவை ஒரு போட்டித்தன்மை மிக்க, உயர் திறன் கொண்ட பிராந்திய டிஜிட்டல் மையமாக மாற்றும் அரசாங்கத்தின் முயற்சிக்குக் கிடைத்துள்ள பெரும் அங்கீகாரமாகும்.
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மலேசியா ஒரு சிறந்த மூலோபாயக் கூட்டாளியாகத் திகழ்வதை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கம் தரவு மையங்களின் மேம்பாடு, செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கக் கொள்கைகளைச் சீரமைத்து வரும் வேளையில், இத்தகைய பெரும் முதலீடுகள் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் நிறுவனங்களுக்கும் அதிக வேலைவாய்ப்புகளும் தொழில்நுட்பப் பகிர்வும் கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
