நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

300 ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது; இந்திய சமுதாயத்திற்காக கூடுதல் நிதியை கேட்டு பெறுவது எனது பொறுப்பு: டத்தோஸ்ரீ ரமணன்

பிரிக்பீல்ட்ஸ்:

இந்திய சமுதாயத்தின் நலனுக்காக அரசாங்கத்திடம் கூடுதல் நிதியை கேட்டு பெறுவது எனது பொறுப்பாகும். மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

இந்து ஆலயங்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல.

ஆலயங்கள் வாயிலாக சமுதாயத்திற்காக கல்வி, கலாச்சாரம் உட்பட பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளலாம்.

இந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மித்ராவின் கீழ் தர்ம மடானி எனும் நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 1,000 இந்து ஆலயங்கள் பயனடையும் வகையில் மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன் கீழ் ஒவ்வொரு ஆலயத்திற்கும் 20,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே முதற்கட்டமாக 155 ஆலயங்களுக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக இன்று மேலும் 300 ஆலயங்களுக்கு மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை ஆலய நிர்வாகங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலமே இத்திட்டத்தை தொடர்வதுடன் கூடுதல் நிதியை பெற முடியும்.

மேலும் மித்ராவின் கீழ் இவ்வாண்டு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டங்கள் நிச்சயம் சமுதாயத்திற்கு பயனளிக்கும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

மித்ராவை தவிர்த்து இந்திய சமுதாயத்தின் நலன் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள், நிதிகள் உள்ளன.

குறிப்பாக மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப் வாயிலாக வெற்றி மடானி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டங்களுக்காக 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதிகள் அனைத்தையும் இந்திய சமுதாயம் முழுமையாக பயன்படுத்தினால் அரசாங்கத்திடம் இருந்து இன்னும் கூடுதல் நிதிகளை கேட்டு பெறுவது எனது பொறுப்பாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset