செய்திகள் மலேசியா
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா; மே 21ஆம் தேதி சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்: டத்தோ முருகையா
சிரம்பான்:
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா மே 21ஆம் தேதி சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா இதனை கூறினார்.
மஇகா தொடங்கப்பட்டு தற்போது 80 ஆண்டுகள் நிறைவை அமைந்துள்ளது.
இந்த 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை மஇகா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடவுள்ளது. குறிப்பாக 9 திட்டங்களின் வாயிலாக இந்த 80ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது.
முதலாவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தான் இந்த மஇகா கட்சி தொடங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இக்கூட்டுப் பிரார்த்தனை வரும் மே 21ஆம் தேதி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
இதே போன்று நாடு முழுவதும் நடத்தப்படும் பிரார்த்தனைகள் நடத்தப்படும்.
மஇகாவில் கிறிஸ்துவர்களும் முஸ்லிம் அன்பர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதனால் அவர்களின் வழியிலும் பிரார்த்தனைகளும் நடத்தப்படும்.
மஇகா உறுப்பினர்களின் டும்ப தின விழா நாடு முழுவதும் நடத்தப்படும்.
மேலும் மருத்துவ முகாம், ரத்த தானம், புற்றுநோய் பரிசோதனைகளும் நடத்தப்படும்.
கால்பந்து, கபடி, பூப்பந்து என விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். கலை, கலாச்சார, பாரம்பரிய நிகழ்வுகளும் நடத்தப்படும்.
பேச்சு போட்டியுடன் மக்களுடனான சிறப்பு சந்திப்பு கூட்டம் நடத்தப்படும். உச்சக்கட்டமாக மாபெரும் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்படும்.
மஇகா 80 ஆண்டுகாலமாக இந்த நாட்டிலேயே செயல்பட்டு வருகிறது.
மஇகாவின் சாதனைகள், போராட்டங்கள் ஆகியவற்றை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இது அமையும்.
நெகிரி செம்பிலான் மஇகா தொகுதி தலைவர்கள், உறுப்பினர்களுக்கான 80ஆம் ஆண்டு நிறைவு விழா தொடர்பான விளக்கக் கூட்டத்திற்கு பின் டத்தோ முருகையா செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 12:30 pm
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் குறுஞ்செய்தி: கைதான 46 வயது ஆடவரின் நோக்கம் அம்பலமானது
April 28, 2026, 11:55 am
அரச மலேசியக் கடற்படையின் 92-வது ஆண்டு விழா: கடல் எல்லைகளின் பாதுகாவலர்களுக்கு வீர வணக்கம்
April 28, 2026, 11:27 am
பூடி95 ஒதுக்கீட்டில் மாற்றமில்லை: முஹம்மத் காமில்
April 28, 2026, 11:06 am
மனிதாபிமானம் எங்கே? ஆட்டிசம் கொண்டவர்களின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தும் இணையக் குற்றவாளிகள்
April 28, 2026, 10:57 am
வாய்க்காலில் விழுந்து ஆற்றுக்கு அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
April 28, 2026, 10:39 am
புயல், கனமழையால் மாணவர்கள் பாதிப்படையவில்லை: அஷ்ரஃப் வாஜ்தி
April 28, 2026, 10:15 am
