செய்திகள் மலேசியா
அரச மலேசியக் கடற்படையின் 92-வது ஆண்டு விழா: கடல் எல்லைகளின் பாதுகாவலர்களுக்கு வீர வணக்கம்
கோலாலம்பூர்:
நாட்டின் கடல் நீரின் பாதுகாப்பைப் பேணுவதில் சோர்வு அறியாத சேவையை மேற்கொண்டு வரும் அரச மலேசிய கடற்படையின் (தி.எல்.டி.எம்) அனைத்து ஊழியர்களுக்கும் தனது மிக உயர்ந்த பாராட்டுகளை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
தி.எல்.டி.எம்-இன் 92-வது ஆண்டு விழாவையொட்டி, நாட்டின் கடல் நீரின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் எப்போதும் தயார்நிலையுடன் இருக்கும் அந்தப் பாதுகாப்புப் படையை தேசத்தின் போராளிகள் என்று அவர் விவரித்தார்.
தி.எல்.டி.எம்-இன் ஒவ்வொரு உறுப்பினரும் அதிகாரியும் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், போர் உணர்வு ஆகியவை மலேசிய மக்கள் அனைவருக்கும் பெருமையளிப்பதாக அஹ்மத் ஜாஹித் கூறினார்.
"இன்ஷா அல்லாஹ், தி.எல்.டி.எம் தொடர்ந்து திறமையான, மதிப்புமிக்க, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் ஒரு கடற்படையாக இருக்கும்" என்று அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
இதற்கிடையில், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர், நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் கடற்படை வீரர்களின் தியாகமும் சேவையும் மக்களுக்கும், தேசத்திற்கும் மிகப் பெரிய மதிப்பைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
தி.எல்.டி.எம்-இன் ஊழியர்கள், மிகுந்த துணிச்சல், ஒழுக்கம், தேசப்பற்று உணர்வுடன், நாட்டின் கடல் நீரின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"மலேசியாவின் அமைதி, இறையாண்மைக்காக உங்கள் சேவை, தியாகத்திற்கு நன்றி" என்று அந்தப் படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
கடலின் கரங்களில் காவலாக நிற்கும் அரச மலேசிய கடற்படையின் தியாகம் நாட்டின் அமைதிக்கான அடித்தளமாகும். எல்லை தெரியாத கடலில் கூட நாட்டின் எல்லையைக் காக்கும் கடல் வீரர்களின் அர்ப்பணிப்பு மதிக்கத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 12:30 pm
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் குறுஞ்செய்தி: கைதான 46 வயது ஆடவரின் நோக்கம் அம்பலமானது
April 28, 2026, 11:27 am
பூடி95 ஒதுக்கீட்டில் மாற்றமில்லை: முஹம்மத் காமில்
April 28, 2026, 11:06 am
மனிதாபிமானம் எங்கே? ஆட்டிசம் கொண்டவர்களின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தும் இணையக் குற்றவாளிகள்
April 28, 2026, 10:57 am
வாய்க்காலில் விழுந்து ஆற்றுக்கு அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
April 28, 2026, 10:39 am
புயல், கனமழையால் மாணவர்கள் பாதிப்படையவில்லை: அஷ்ரஃப் வாஜ்தி
April 28, 2026, 10:15 am
