நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாய்க்காலில் விழுந்து ஆற்றுக்கு அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

மலாக்கா தெங்கா: 

நேற்று மாலை இங்குள்ள தாமான் ஆயர் கெரோ ஹைட்ஸில், தனது வீட்டின் முன்னால் இருந்த ஒரு வடிகாலில் விழுந்ததில், 12 வயதுடைய ஒரு சிறுவன், சுயநினைவின்றிக் காணப்படுவதற்கு முன், அருகிலிருந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மாலை 5.53 மணிக்கு தமது தரப்பு புகாரைப் பெற்றதாகவும், அதன் பின்னர் ஆயர் கெரோ தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் (ஜே.பி.பி.எம்) மலாக்கா நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் முஹம்மத் ஷாஹ்ரோம் லாஜி தெரிவித்தார்.

"நீரின் மேற்பரப்பில் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் விளையாடிக் கொண்டிருந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் ஆறு மீட்டர் தொலைவில், சுயநினைவின்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர், மேலதிக நடைமுறைகளுக்காக சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், தீயணைப்பு உறுப்பினர்கள் அவருக்கு ஆரம்ப சி.பி.ஆர் உதவியை வழங்கியதாக அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

"இதுவரை, தற்போதைய நிலை குறித்த தகவல்கள் இன்னும் பெறப்படவில்லை" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset