நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸை மந்திரி புசார் சந்தித்ததாக நம்பப்படுகிறது

போர்ட்டிக்சன்:

மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண், நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை இன்று மதியம் சந்தித்ததாக நம்பப்படுகிறது.

14  தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் அமினுடின் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் நம்பிக்கையை இழந்து ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்ததையடுத்து, நிர்வாக நெருக்கடி குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடந்ததாக தெரிகிறது.

இன்று காலை போர்ட்டிக்சனில் நடைபெற்ற டத்தோ முஹம்மது யூசோப்  இடைநிலைப்பள்ளியில் சிறந்த விருது வழங்கும் விழாவில் அமினுடின் கலந்து கொண்டார்.

ஆனால் கோலாலம்பூரில் இருப்பதாக நம்பப்படும் நெகிரி செம்பிலானின் ஆளுநரை சந்தித்ததாக நம்பப்படும்.

சுமார் 11 மணியளவில் விழாவிலிருந்து அவசரமாக வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset