நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும்: அந்தோனி லோக்

சிரம்பான்:

மாநில அரசை அமைப்பதற்காக, கடந்த மாநிலத் தேர்தலில் மக்களால்  வழங்கப்பட்ட ஆணையை அம்னோ மதிக்க வேண்டும்.

ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

அக்கட்சி ஆட்சியாளர், அரசியலமைப்பு கொள்கையை இன்னும் நிலைநிறுத்த வேண்டும்.

ஆக நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் வழக்கம் போல் தனது கடமைகளைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.

மேலும் அமினுடின் தற்காலிக மந்திரி புசாராக இருப்பதற்கு ஜசெக முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.

இந்தப் பதவியின் தொடர்ச்சியும், அரசாங்கத்தின் தொடர்ச்சியும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி என்பது மக்களால் வழங்கப்பட்ட ஒரு ஆணை.

அம்னோ ஆதரவைத் திரும்பப் பெறும்போது, ​​நெகிரி செம்பிலான் மக்களின் ஆணையை அவர்கள் மதிக்கவில்லை என்று அர்த்தம்.

ஒரு மறைமுக அரசாங்கத்தை அமைக்க எந்தக் கட்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்

இன்று சிரம்பானில் உள்ள மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமினுடினுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset