நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலாக்காவின் வருவாய் வசூல் சரியான பாதையில் பயணிக்கிறது: ரவுப் யூசோப்

மலாக்கா:

இந்த ஆண்டின் முதல் காலாண்டின்படி, மாநில வருவாயின் வசூல் தொடர்ந்து சிறப்பான செயல்திறனைக் காட்டி, வலுவான பாதையில் உள்ளது.

மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, பதிவுசெய்யப்பட்ட மாநில வருவாய் வசூல் வெ 114.9 மில்லியனாக உள்ளது.

இது இந்த ஆண்டுக்கான வெ 528.99 மில்லியன் என மதிப்பிடப்பட்ட வருவாயில் 21.72 சதவீத சாதனையாகும் என்றும் முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரவுப் யூசோப் கூறினார்.

மேலும், மாநிலத்தை இயக்கச் செலவினமாக வெ 92.61 மில்லியனாக உள்ளது என்றும், இது சமர்ப்பிக்கப்பட்ட வெ 528.88 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 17.51 ​​சதவீதத்திற்குச் சமம் என்றும் அவர் கூறினார்.

2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின்படி,வெ 93 மில்லியன் ஒதுக்கீட்டில் இருந்து 13.91 சதவீதம் செலவிடப்பட்ட வெ 12.49 மில்லியனாக உள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்கு இணங்க, இந்த ஆரம்பக்கட்ட சாதனையானது, மாநில அரசு கவனமாகத் திட்டமிடுவது மட்டுமல்லாமல், திட்டமிடப்பட்ட ஒவ்வொரு முதல் முயற்சியையும் மலாக்கா மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் விரைவாகவும் திறம்படவும் செயல்படுகிறது என்பதை நிரூபிக்கிறது.

மேலும் இது மாநில அரசின் வருவாய் ஆதாரங்களை விவேகமாகவும் வலுப்படுத்தும் திறனையும் பிரதிபலிக்கிறது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முயற்சிகளைச் செயல்படுத்துவதன் நிலை குறித்துக் கருத்து தெரிவித்த முதலமைச்சர், முதல் காலாண்டின்படி, மொத்தம் 204 முயற்சிகளில் 4.9 சதவீதம், நிறைவடைந்துள்ளதாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset