நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் புதிய அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்ற தேசியக் கூட்டணி தயார்

சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் புதிய அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்ற தேசியக் கூட்டணி தயாராக உள்ளது.

சற்று நேரத்திற்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும் லாபு சட்டமன்ற உறுப்பினருமான முகமது ஹனிபா அபு பாக்கர் இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

14  தேசிய முன்னணி சட்டமன்ற  உறுப்பினர்கள் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருணுக்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஒரு புதிய மாநில அரசை அமைக்க  அம்னோ, தேசிய முன்னணி உடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தது.

நெகிரி செம்பிலானை மேம்படுத்தவும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்,

மேலும் மாநில நிர்வாகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஐந்து தேசியக் கூட்டணி  சட்டமன்ற உறுப்பினர்கள் நெகிரி செம்பிலானின் 14 தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக முகமது ஹனிபா கூறினார்.

கடந்த சில வாரங்களாக மாநில அரசுத் தலைமை நெருக்கடியில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரும் கவனித்து வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset