நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு

புத்ராஜெயா:

மூடா கட்சியின் நிதி முறைகேடு வழக்கில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக்கிற்கு  வழங்கப்பட்ட தண்டனையை  ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பு செய்த இறுதி மேல்முறையீட்டின் மீது ஜூன் 30 அன்று தீர்ப்பளிக்க கூட்டரசு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹருதீன் வான் லாடின் இன்று அறிவித்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் டத்தோஶ்ரீ அபு பாக்கர் ஜெய்ஸ், டத்தோ சே முகமது ருசிமா கசாலி,  டத்தோ கோலின் லோரன்ஸ் செக்குவேரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கும்.

மூவார் நாடாளுமன்ற உறுப்பினரை அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பு செய்த இறுதி மேல்முறையீட்டை இந்த அமர்வு விசாரித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 25 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம், அர்மாடா நிதிகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறலுக்கு உடந்தையாக இருத்தல், சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துதல், பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து சையத் சாதிக்கை விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset