செய்திகள் மலேசியா
இறுதித் தெளிவு கிடைக்கும் வரை மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அமினுடின்
சிரம்பான்:
இறுதித் தெளிவு கிடைக்கும் வரை நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்.
மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவிக்கு தனக்கு அளித்து வந்த ஆதரவை 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பப் பெற்ற போதிலும், வழக்கம் போல் தொடர்ந்து பணியாற்றுவேன்.
நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் நான் ஆஜரானேன்.
மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற இறுதித் தெளிவு ஏற்படும் வரை நிர்வாகத்தைத் தொடருமாறு தனக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் கூறினார்.
முறையாகப் பரிசீலித்த பின்னர், இறுதித் தெளிவு ஏற்படும் வரை மந்திரி புசாராக எனது பொறுப்புகளை நிறைவேற்றுமாறு துவாங்கு அறிவுறுத்தி உத்தரவிட்டார்.
மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, மாநில அரசு வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 8:12 pm
மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:56 pm
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:22 pm
