செய்திகள் மலேசியா
ஒப் தாரிங் வாவாசான் நடவடிக்கை: காட்டில் பதுங்கிய மியான்மர் வாலிபர்கள் அதிரடியாக கைது
பாசிர் மாஸ்:
தாய்லாந்து எல்லையிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்து, பாசிர் மாஸ் அருகே உள்ள கம்போங் தோக் ரூசா காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த 10 மியான்மர் நாட்டவர்களைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
'ஒப் தாரிங் வாவாசான்' (Op Taring Wawasan) நடவடிக்கையின் கீழ் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தென்கிழக்கு பிரிகேட் பொது இயக்கப் படையினர் (PGA), நேற்று இரவு 7 மணியளவில் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 47 வயதுடைய ஆண்கள் ஆவர். இவர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு முறையான பயண ஆவணங்கள் எதையும் வைத்திருக்கவில்லை என்பது விசாரணையில் உறுதியானது.
ஆளில்லாத எல்லைப் பாதைகள் வழியாக படகுகள் மூலம் இவர்கள் நாட்டிற்குள் ஊடுருவியதும், பிடிபடாமல் இருக்க அடர்ந்த காட்டுப்பகுதியைத் தற்காலிகமாகத் தங்குமிடமாகத் தேர்ந்தெடுத்ததும் தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், மலேசியாவிற்குள் அழைத்து வரப்படுவதற்காக ஒவ்வொருவருக்கும் தலா RM4,000 ரிங்கிட் பணம் கொடுத்துள்ளனர். தாய்லாந்து எல்லையிலிருந்து இரண்டு முறைகளாகப் படகு மூலம் இவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பெரும் பொருட்செலவில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட போதிலும், இறுதியில் பாதுகாப்புப் படையினரின் உளவுத் தகவலால் அனைவரும் பிடிபட்டனர்.
தற்போது இந்த வழக்கு குடிவரவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காகப் பாசிர் மாஸ் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்கத் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனப் பாதுகாப்புப் படைத் தளபதி அஹம்மத் ரட்ஸி ஹுசைன் தெரிவித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 8:12 pm
மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 27, 2026, 8:11 pm
இறுதித் தெளிவு கிடைக்கும் வரை மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அமினுடின்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:56 pm
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:22 pm
