செய்திகள் மலேசியா
பாதுகாப்பு உடைகள் வெறும் படுக்கை விரிப்புகளா? மீனவர்களின் ஆபத்தான போக்கு
ஷா ஆலம்:
கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிர் காக்கும் கவச உடைகளை முறையாகப் பயன்படுத்தாமல், அவற்றை வெறும் படுக்கை விரிப்புகளாகப் பயன்படுத்தி வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய அலட்சியப்போக்கு, எதிர்பாராத அவசர காலங்களில் மீனவர்களின் உயிருக்கே பெரும் ஆபத்தாக முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே பல மீனவர்கள் இக்கருவிகளைப் படகுகளில் வைத்துள்ளனர்.
இது மீனவர் சமூகத்தினிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இது குறித்து சிலாங்கூர் மாநில மீன்வளத் துறை இயக்குநர் நோரைஷா அபு பாக்கார் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, உயிர் காக்கும் கவச உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைப் பூர்த்தி செய்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
அடிப்படை விதிமுறைகளின்படி அனைத்துப் படகுகளும் பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டிருந்தாலும், கடலில் அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவலையளிக்கிறது.
சோதனையின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மீனவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, அவற்றைச் சரி செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 11:13 am
வறட்சியின் பிடியில் வடக்கு மாநிலங்கள்: அபாயக் கட்டத்தை நோக்கி அணைகள்
April 26, 2026, 10:49 am
அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்: பிரதமர் அன்வார்
April 26, 2026, 10:27 am
மக்களின் புகார்கள் மேஜையில் குவிய விடாதீர்கள்: அப்துல் ரவுஃப்
April 26, 2026, 9:53 am
நாட்டில் 5 லட்சம் பேர் 4 நோய்களுடன் வாழ்கின்றனர்: டாக்டர் சுல்கிப்ளி
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
