நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக மேடைக்குத் தயாராகும் மலேசிய மாணவிகள்; 1 லட்சம் ரிங்கிட் நிதியுதவியை வழங்கும் பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

ஸ்ரீ புத்ரி பள்ளியின் 'சிம்போனிக் வின்ட்ஸ்' (SPWinds) இசைக்குழுவிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் 100,000 ரிங்கிட் நிதியுதவியை இன்று அறிவித்துள்ளார். 

கலைத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களின் மேம்பாட்டிற்கும், அவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் இந்தத் தொகை நிதியமைச்சராகவும் பதவி வகிக்கும் பிரதமரால் வழங்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெற்ற "வின்ட்ஸ் ஓஃப் க்ளோரி" (Winds of Glory) என்ற இசை நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்த பிரதமர், மாணவிகளின் அபாரமான திறமையைப் பாராட்டினார். 

உள்ளூர் கலைஞர் அமீர் மஸ்தியுடன் இணைந்து சுமார் 1,000 பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த இசைக்குழு வழங்கிய கலைப்படைப்பு அனைவரையும் கவர்ந்தது.

இந்த இசை நிகழ்ச்சி, வரும் ஜூலை மாதம் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள '2026 உலக இசைப் போட்டிக்கு' (WMC) மாணவிகளைத் தயார்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது. 

இப்போட்டியில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகளைத் திரட்டும் நோக்கில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆதரவுக் குழுவினரால் இந்த அறப்பணி இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற உலக இசை விழாவில் தங்க விருது வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்த இசைக்குழு, தற்போது பிரதமரின் இந்த நிதியுதவி, ஊக்கத்தின் மூலம் உலக மேடையில் மீண்டும் சாதிக்கத் தயாராகி வருகின்றது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset