நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூ.ஐ.டி.எம் பல்கலைக்கழக வாயிலில் அநாகரிகச் செயல்: மர்ம நபருக்கு போலிஸ் வலைவீச்சு

டுங்குன்: 

மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (UiTM) டுங்குன் கிளை நுழைவாயில் அருகே நடைபெற்ற அநாகரிகமான, ஆபாசமான செயல் குறித்து டுங்குன் மாவட்ட காவல்துறை தலைமையகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த ஒருவரிடம் மிகவும் தரக்குறைவாகவும் அநாகரிகமாகவும் நடந்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் இச்செயலைச் செய்தவுடன் உடனடியாக அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளக் காணொலியை ஆதாரமாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் பணிகளில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டுங்குன் மாவட்ட இடைக்கால காவல்துறைத் தலைவர் ஜுமாய்டி பா சோங் வெஹ், "பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களை காவல்துறை மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கிறது" என்று கூறினார். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 377D பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சாட்சிகள், இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக முன்வந்து போலிசாருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த நபரை விரைவில் கைது செய்து சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset