நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“அதிகாரத்தில் நீடிப்பதற்காக சர்வாதிகாரிகள் உண்மையை சிதைக்கிறார்கள்” என டிரம்ப் பற்றி ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் சாடல் 

வியன்னா: 

“அதிகாரத்தில் நீடிப்பதற்காக சர்வாதிகாரிகள் உண்மையை சிதைக்கிறார்கள்” என டிரம்ப் பற்றி ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ மத தலைவர் 14ம் போப் லியோ தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து கடந்த 12ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், “போப் லியோ குற்றச்செயல்கள் மீது அதிக விருப்பம் கொண்டவராக இருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில், தன்னை(டிரம்ப்பை) இயேசு போல சித்திரிக்கும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படத்தை வௌியிட்டிருந்தார். அதில் நீண்ட அங்கிகளை அணிந்திருந்த டிரம்ப், நோய் வாய்ப்பட்ட ஒருவரின் தலை மீது தன் கையை வைத்து ஆசிர்வதிப்பது போல இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்படம் வௌியாகி 2 வாரங்கள் கடந்து விட்ட நிலையில் டிரம்பின் செயலை ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், “செயற்கை நுண்ணறிவு, கணினி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் தங்களை இயேசுவாகவோ அல்லது மருத்துவராகவே சித்தரித்து கொள்ள முடியும். இதன் மூலம் மக்கள் எது சரி, எது தவறு என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பம் ஏற்படுத்துவதே சர்வாதிகாரிகளின் அடிப்படை அரசியல் உத்தி" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை கடுமையாக சாடினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset