செய்திகள் மலேசியா
மக்களுக்கு மருத்துவம் இலவசமாகவும் விரைவாகவும் கிடைக்க வேண்டும்; இதுவே எனது இலக்கு: டாக்டர் சத்தியபிரகாஷ்
புக்கிட் பெருந்தோங்:
மக்களுக்கு மருத்துவம் இலவசமாகவும் விரைவாகவும் கிடைக்க வேண்டும்.
இதுவே எனது இலக்கு என்று உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
ஜூவாண்டா சமூக நல இயக்கம் புக்கிட் பெருந்தோங்கில் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கம் ஆதரவற்ற மக்களை அரவணைத்து பாதுகாத்து வருகிறது. 2 வயது முதல் 78 வயது வரையிலான மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
குறிப்பாக இங்கு அதிகமான முதியவர்கள் வசிப்பதால் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் எஸ்பி கேர் மருத்துவ குழுமத்தின் சார்பில் அவர்களுக்கு மருத்துவ உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் எஸ்பி கேர் மருத்துவர்கள் அடிக்கடி இங்கு வந்து இங்குள்ள அவர்களுக்கு மருத்துவ சோதனைகளை செய்வார்கள்.
இந்த உதவிகள் இங்கு வசிப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே உலு சிலாங்கூர் மக்களுக்கு என மருத்துவமனை கட்ட வேண்டும் என நீண்ட காலமாக நான் குரல் கொடுத்து வருகிறேன்.
காரணம் இங்குள்ள மக்கள் அவசர சிகிச்சை என்றால் செலயாங், சுங்கைபூலோ அல்லது சிலிம் ரீவருக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இருந்த போதிலும் இதற்கு இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
மக்களுக்கு மருத்துவம் இலவசமாகவும் விரைவாகவும் கிடைக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் இம்மருத்துவமனைக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 4:03 pm
முறையற்ற பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய பெண்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
April 24, 2026, 3:49 pm
நீலாயில் பரபரப்பு: அரிவாளுடன் மளிகைக் கடையில் புகுந்து கொள்ளையிட்ட நபர் கைது
April 24, 2026, 3:13 pm
கோத்தா திங்கி துப்பாக்கிச் சூடு: 71 வயதுத் தோட்டக்காரர் விசாரணை
April 24, 2026, 12:53 pm
எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு
April 24, 2026, 12:06 pm
கிள்ளான் குடியிருப்பில் ஆடவர் சடலமாக மீட்பு: வெளிநாட்டுப் பெண் கைது
April 24, 2026, 11:29 am
