நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலக்கவியல் தொழில்நுட்பத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் திட்டங்கள் அதிகரிக்கப்படும்: கோபிந்த் சிங்

மலாக்கா:

தேசிய ரீதியில் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இலக்கவியல் தலைமைத்துவம், மடானி கல்வி உருமாற்றுக் கருத்தரங்கம் 3 நாட்களுக்கு நடைபெற்றது.

மலாக்காவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் சிறப்பு கருத்தரங்கை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

தமிழ்ப்பள்ளிகள் தமிழாசிரியர் கழகமும், இலக்கவியல் அமைச்சும் கல்வியமைச்சோடு இணைந்து இந்த இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு சிறப்பு அங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.

2030இல் மலேசியா செயற்கை நுண்ணறிவு நாடாக மாற வேண்டும் என்கிற இலக்கை நோக்கி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வழி கடந்த ஆண்டு மலேசியாவின் பொருளாதாரம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25.5% அளவில் பங்களித்துள்ளது.
2030ஆம் ஆண்டு வாக்கில், 30% வரை உயர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இலக்கவியல் தொழில் நுட்பம் என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கியது.

குறிப்பாக கல்வித் துறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் இன்றியமையாதது. இலக்கவியல் துறையில் நாடு கோலோச்சவும், துறையின் சவால்களை எதிர்கொள்ளவும், திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இக்காரணத்தினால் தான் செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் துறையில் பள்ளிகள் திறனை வளர்த்துக் கொள்ள இலக்கவியல் அமைச்சு கைக்கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.


இலக்கவியல் தொழில்நுட்பத்தில் தமிழ்ப்பள்ளிகள் சிறந்து விளங்க, தலைமை ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.

இந்தத் துறையில் தலைமை ஆசிரியர்கள் மேம்பாடடைந்து, அதன் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயனடைய இலக்கவியல் அமைச்சு உறுதுணையாக இருக்கும்.

அதோடு இலக்கவியல் நிர்வாக தலைமைத்துவ பயிற்களை மாநில ரீதியில் வழங்க அமைச்சு உத்தேசித்துள்ளதாகவும் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார்.

470 தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியில் மலேசிய இலக்கவியல் கூட்டுறவு நிறுவன தலைவரும், ஆசிய வணிக கல்வி மையத்தின் செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் டாக்டர் டாவிட் ஆசிர்வாதம் அவர்களும் பங்குகொண்டு இது தொடர்பாக சொற்பொழிவாற்றினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset