செய்திகள் மலேசியா
முறையற்ற பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய பெண்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
சிரம்பான்:
தங்கள் வங்கிக் கணக்கில் இருந்த முறையற்ற பணத்தைப் பற்றிய விளக்கத்தை அளிக்கத் தவறிய இரண்டு இல்லத்தரசிகளுக்குச் சிரம்பான் நீதிமன்றம் தலா RM400 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
27 வயதுடைய நூர் சப்ரீனா, 42 வயதுடைய எம். பரமேஸ்வரி ஆகிய இருவர் மீதும் தனித்தனியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், மஜிஸ்திரேட் நூருல் சகினா ரோஸ்லி முன்னிலையில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
வழக்கின் விவரப்படி, நூர் சப்ரீனா தனது கணக்கில் RM6,988 ரிங்கிட் பணத்தையும், பரமேஸ்வரி RM1,000 ரிங்கிட் பணத்தையும் வைத்திருந்தனர்.
மோசடி மூலம் பெறப்பட்ட இந்தப் பணம் எவ்வாறு அவர்கள் கணக்கிற்கு வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர்கள் தவறியதால், 1955-ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், இது அவர்களின் முதல் குற்றம் என்பதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சத் தண்டனை வழங்குமாறு கோரினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தலா RM400 ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தத் தவறினால், இருவருக்கும் ஒரு வார காலச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை மற்றவர்களிடம் பகிரும்போதும், மர்மமான முறையில் பணம் வரவு வைக்கப்படும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த வழக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 3:49 pm
நீலாயில் பரபரப்பு: அரிவாளுடன் மளிகைக் கடையில் புகுந்து கொள்ளையிட்ட நபர் கைது
April 24, 2026, 3:13 pm
கோத்தா திங்கி துப்பாக்கிச் சூடு: 71 வயதுத் தோட்டக்காரர் விசாரணை
April 24, 2026, 12:53 pm
எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு
April 24, 2026, 12:06 pm
கிள்ளான் குடியிருப்பில் ஆடவர் சடலமாக மீட்பு: வெளிநாட்டுப் பெண் கைது
April 24, 2026, 11:29 am
