செய்திகள் மலேசியா
கிள்ளான் குடியிருப்பில் ஆடவர் சடலமாக மீட்பு: வெளிநாட்டுப் பெண் கைது
ஷா ஆலம்:
நேற்று மாலை கிள்ளான், பெலாங்கி புரொமெனேட்டில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், போலிஸார் ஒரு வெளிநாட்டுப் பெண்ணைத் தடுத்து வைத்துள்ளனர்.
மாலை 3.15 மணிக்கு அந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த புகாரைத் தாம் பெற்றதாகக் கிள்ளான் உத்தரா மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் எஸ். விஜயா ராவ் தெரிவித்தார்.
"அதைத் தொடர்ந்து, 30 வயதைக் கடந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், விசாரணைக்கு உதவும் வகையில், சம்பவ இடத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
"பாதிக்கப்பட்டவருக்கும், சந்தேக நபருக்கும் இடையிலான தவறான புரிதலே இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்று நம்பப்படுகிறது. தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், எந்தவொரு ஆதாரமற்ற அனுமானங்களையும் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 4:03 pm
முறையற்ற பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய பெண்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
April 24, 2026, 3:49 pm
நீலாயில் பரபரப்பு: அரிவாளுடன் மளிகைக் கடையில் புகுந்து கொள்ளையிட்ட நபர் கைது
April 24, 2026, 3:13 pm
கோத்தா திங்கி துப்பாக்கிச் சூடு: 71 வயதுத் தோட்டக்காரர் விசாரணை
April 24, 2026, 12:53 pm
எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு
April 24, 2026, 11:29 am
