நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு

கோலாலம்பூர்: 

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, மலேசியாவின் பணவீக்க விகிதம் வரும் மாதங்களில் 2 சதவீதமாக உயரும் என 'எம்.பி.எஸ்.பி' (MBSB) ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. 

கடந்த மாதம் 1.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், போக்குவரத்துச் செலவுகள் மட்டுமின்றி சுகாதாரம், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான கட்டண உயர்வாலும் அதிகரிக்கக்கூடும் என அதன் பொருளாதார நிபுணர் அப்துல் முயிஸ் மொர்ஹலிம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலவினாலும், மலேசிய மத்திய வங்கி (BNM) தனது ஓ.பி.ஆர் (OPR) எனப்படும் ஒருநாள் கடன் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் அவசரம் காட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதைய பணவீக்க உயர்வு என்பது விநியோகத் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டதே தவிர, மக்களின் வாங்கும் திறன் அதிகரித்ததால் ஏற்பட்டதல்ல. எனவே, இந்தச் சூழலில் வட்டி விகிதத்தை உயர்த்தினால் அது மக்கள், வணிகர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருந்தால், வட்டி விகிதத்தை மீண்டும் 3 சதவீதம் வரை உயர்த்த மத்திய வங்கி பரிசீலிக்க வாய்ப்புள்ளது. 

தற்போது வட்டி விகிதம் 2.75 சதவீதத்திலேயே நீடிக்கிறது. உலகளாவிய புவிசார் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை ஆகியவை நாட்டின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset