செய்திகள் மலேசியா
ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட DARA, AMOI, KELAR ஆகிய 3 யானைகள் உடனடியாக மலேசியாவுக்கு கொண்டு வர வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்
புத்ராஜெயா:
ஜப்பானுக்கு அனுப்பப்பட்டDARA, AMOI, KELAR ஆகிய 3 யானைகள் உடனடியாக மலேசியாவுக்கு கொண்டு வர வேண்டும்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.
தைப்பிங்கில் உள்ள யானைகள் பராமரிப்பு மையத்தில் இந்த மூன்று யானைகளும் இருந்தன.
ஆனால் திடீரென இம்மூன்று யானைகளும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டன.
அங்கு அந்த யானைகளுக்கு பல அநீதிகள் நடந்து வருகிறது.
குறிப்பாக அந்த யானைகளின் தந்தங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆண் யானையின் காலில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில் ஜப்பான் பருவ நிலை மாற்றம் யானைகளுக்கு பொருத்தமானதாக இல்லை.
ஜப்பானில் உள்ள அரசு சாரா இயக்கங்களின் உதவியால் இதற்கான ஆதாரங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.
இதன் அடிப்படையில் தான் இயற்கை வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சிடம் ஒரு மகஜரை நாங்கள் வழங்கினோம்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் யானைகள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் அமைச்சருக்கே தெரியவில்லை.
ஆக அமைச்சர் இவ்விவகாரத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட DARA, AMOI, KELAR ஆகிய 3 யானைகள் உடனடியாக மலேசியாவுக்கு கொண்டு வர வேண்டும்.
இதுவே எங்களின் கோரிக்கை என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 4:03 pm
முறையற்ற பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய பெண்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
April 24, 2026, 3:49 pm
நீலாயில் பரபரப்பு: அரிவாளுடன் மளிகைக் கடையில் புகுந்து கொள்ளையிட்ட நபர் கைது
April 24, 2026, 3:13 pm
கோத்தா திங்கி துப்பாக்கிச் சூடு: 71 வயதுத் தோட்டக்காரர் விசாரணை
April 24, 2026, 12:53 pm
எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு
April 24, 2026, 12:06 pm
கிள்ளான் குடியிருப்பில் ஆடவர் சடலமாக மீட்பு: வெளிநாட்டுப் பெண் கைது
April 24, 2026, 11:29 am
