செய்திகள் மலேசியா
கோத்தா திங்கி துப்பாக்கிச் சூடு: 71 வயதுத் தோட்டக்காரர் விசாரணை
ஜொகூர் பாரு:
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோத்தா திங்கியின் தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில், மூன்று நபர்கள் உயிரிழப்புக்குக் காரணமான, ஆறு தோட்டாக்களைச் சுட்டதாக நம்பப்படும் முதியவர் ஒருவர், இந்த திங்கட்கிழமை குற்றஞ்சாட்டப்படவுள்ளார்.
ஜொகூர் போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹாமான் அர்சாத், சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், ஆறு தோட்டாக்களின் உறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
"முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கையை இன்னும் நாங்கள் பெறவில்லை" என்று இன்று இங்குள்ள ஜொகூர் கான்டிஞ்சென் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் கூறினார்.
சம்பவத்திற்கு 30 நிமிடங்களுக்குள் கைது செய்யப்பட்ட, தோட்டக்காரருமான 71 வயதுடைய உள்ளூர் ஆடவர் இந்த திங்கட்கிழமை கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று அவர் கூறினார்.
கொலை செய்தமைக்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ், மூன்று குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர் குற்றஞ்சாட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சந்தேக நபர் இந்த ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்பு காவலில் உள்ளார். நேற்று, விசாரணைக் கோப்பு ஜொகூர் மாநில வழக்குத் தொடுப்பு இயக்குநர் அலுவலகத்திற்குக் குறிப்பிடப்பட்டது. கொலைக் குற்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகளில் சந்தேக நபரைக் குற்றஞ்சாட்டுமாறு நாங்கள் உத்தரவைப் பெற்றோம்" என்றார் அவர்.
மேலும், சந்தேக நபருக்கும், அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்ப உறவு எதுவும் இல்லை என்றும் மாறாக அவர்கள் நண்பர்கள் மட்டுமே என்று அப்துல் ரஹாமான் கூறினார்.
வியட்நாமைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண், அந்த உணவக வணிகத்தை நிர்வகித்து வந்ததாகவும், அது அவரது மாமியாருக்குச் சொந்தமானது என்றும், மற்ற இரண்டுபாதிக்கப்பட்ட ஆடவர்கள் அந்த உணவகத்தின் வழக்கமான வாடிக்கையாளர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
"உணவக வணிகத்தை நிர்வகிப்பதற்கான நோக்கத்திற்காக, அந்தப் பெண் பாதிக்கப்பட்டவருக்கு சந்தேக நபர் கடனாகப் பணம் கொடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாக மொத்தம் 50,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
"இருப்பினும், அந்தப் பணம் கொடுப்பதில் எந்தவிதமான முறையான ஒப்பந்தமோ, செல்லுபடியாகும் ஆவணங்களோ இல்லை" என்றார் அவர்.
அதே நேரத்தில், சந்தேக நபர் பெற்ற துப்பாக்கி உரிமம், இந்த மாநிலத்தில் வழங்கப்படவில்லை என்றும் மாறாக குவாந்தான், பஹாங்கில் வழங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
1991 ஆம் ஆண்டு முதல் சந்தேக நபர் அந்தச் செல்லுபடியாகும் துப்பாக்கி உரிமத்தை வைத்திருப்பதாக அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 4:03 pm
முறையற்ற பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய பெண்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
April 24, 2026, 3:49 pm
நீலாயில் பரபரப்பு: அரிவாளுடன் மளிகைக் கடையில் புகுந்து கொள்ளையிட்ட நபர் கைது
April 24, 2026, 12:53 pm
எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு
April 24, 2026, 12:06 pm
கிள்ளான் குடியிருப்பில் ஆடவர் சடலமாக மீட்பு: வெளிநாட்டுப் பெண் கைது
April 24, 2026, 11:29 am
