செய்திகள் சிந்தனைகள்
வேர் சரியாக இருந்தால் மட்டுமே மரம் நிலைத்து நிற்கும் - வெள்ளிச் சிந்தனை
உயிரினங்களிடையே ஒருமுறைதான் நூஹ் (அலை) அழைப்பு விடுத்தார்கள்; அவை கப்பலில் ஏறிக் கொண்டன.
ஆனால் 950 ஆண்டுகள் மனிதர்களை அழைத்தபோதும் வெள்ளப் பெருக்கில் மூழ்கிப்போவதையே அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
பாடம்: நோயுற்ற அறிவை விட ஆரோக்கியமான இயற்கை மிகச் சிறந்தது!
பெரும் நபியுடைய இல்லத்தில் இருந்தபோதும் நூஹ் (அலை) அவர்களின் மகன் மாறிவிடவில்லை.
பெரும் அடக்குமுறையாளனின் வீட்டில் இருந்தபோதும் ஃபிர்அவ்னின் மனைவி மாறிவிட்டார்.
பாடம்: அமைப்பைக் காரணம் கூறாதீர்கள்;
பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியவர் நீங்கள்தான்!
அபூபக்கர் (ரலி) அணிந்து வந்த முழு நீள அங்கி, தலைப்பாகையைத்தான் எதிரி அபூஜஹ்லும் அணிந்து வந்தான்.
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் தாடியைப் போலவே எதிரி உமைய்யா பின் ஃகலஃபின் தாடியும் நீளமாக இருந்தது.
காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வாள் உருவான அதே இரும்பினால்தான் எதிரி உத்பாவின் வாளும் உருவானது.
பாடம்: இஸ்லாம் தோற்றத்தில் அல்ல. இதயத்தால் புரிந்து கடைபிடிப்பதில் இருக்கிறது!
வேர் சரியாக இருந்தால் மட்டுமே மரம் நிலைத்து நிற்கும்.
அதனால்தான் முஹம்மத் (ஸல்) தமது இதயத்தை சுட்டிக்காட்டி, "இறைபயம் இங்கிருக்கிறது" என்றார்கள்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
