நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்

ஜெனீவா: 

கடந்த 2025-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் புகலிடம் தேடிப் பயணித்த சுமார் 8,000 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தும், காணாமல் போனதாகவும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) கவலை தெரிவித்துள்ளது. 

இது உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்தோரின் நிலைமை மோசமடைந்து வருவதையே காட்டுவதாக அந்த அமைப்பின் மனிதாபிமானப் மீட்புத் துறை இயக்குநர் மரியா மொய்தா தெரிவித்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசியப் பிராந்தியத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக ரோஹிங்கியா, ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இதில் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

மோதல்கள், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறையவில்லை எனவும், அதேவேளையில் பயணப் பாதைகள் மாற்றமடைந்து நீண்ட தூரமாகவும் ஆபத்தானதாகவும் மாறியுள்ளதாக அவர் விளக்கினார்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் பதிவான 9,197 மரணங்களுடன் ஒப்பிடுகையில் 2025-இல் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ள போதிலும், இது உண்மையான சரிவைக் குறிக்கவில்லை என ஐ.ஓ.எம் பிரதிநிதி ஆண்ட்ரியா கார்சியா தெளிவுபடுத்தினார். 

போதியத் தகவல்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களே இதற்குக் காரணம் என்றும், உறுதிப்படுத்தப்படாத நிலையில் மேலும் 1,500 மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset