செய்திகள் உலகம்
ஜப்பானைத் தொடரும் கரடி அச்சுறுத்தல்: தேடுதல் வேட்டையில் நேர்ந்த விபரீதம்
மோரியோகா:
ஜப்பானின் வடகிழக்கில் உள்ள இவாத்தே மாகாணத்தில், செவ்வாய்க்கிழமை ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காணாமல் போன அந்த நபரைத் தேடும் நடவடிக்கையின் போது, ஒரு போலிஸ் அதிகாரி கரடியின் தாக்குதலில் காயமடைந்ததாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த மரணம் கரடி தாக்குதலால் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டால், இது இந்த ஆண்டு ஜப்பானில் இதுபோன்ற முதல் வழக்காக இருக்கும் என்று போலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 3 ஆம் தேதி யுஜாவாவில் கடைசியாக இதுபோன்ற ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஜப்பானில் கரடி தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன. இவாத்தேவில், ஜூலை முதல் அக்டோபர் வரை ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
56 வயதான அந்த போலிஸ் அதிகாரி, செவ்வாய்க்கிழமை காலை, காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையை நடத்தும் போது, ஷிவாவில் உள்ள ஒரு துணை நதிப் பகுதியில் ஒரு கரடியை எதிர்கொண்டதாக போலிஸார் தெரிவித்தனர்.
அதற்குச் சிறிது நேரத்திலேயே, அந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாத நிலையில், ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் போலிஸ் அதிகாரிக்கு அவரது கை, முகப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
1.3 மீட்டர் நீளமுள்ள ஒரு பெண் கரடி, தேடுதல் குழுவில் இருந்த வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 11:36 am
டீசல் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி: ஜூலை 2026 முதல் இந்தோனேசியாவில் 'பி50' அமல்
April 22, 2026, 11:06 am
MH17 வழக்கில் உள் ஆவணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை: ஈ.சி.ஹ்.ஆர்
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்குப் பணிந்த ட்ரம்ப்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
